வணக்கம் சொல்லி
சந்திக்கையிலும்..,
வருகிறேன் என
விடைபெறுகையிலும்..,
இயல்பாய் பேசி
விலகுகிறாய் நீ..
இயக்கமே தடைப்பட்டு
நிற்கிறேன் நான்..
.....................................................................................................
" நீதான் " என்று சொல்ல
உனக்கு தைரியம் இல்லை..
" நானா..? " என்று கேட்க
எனக்கும் தெம்பில்லை..
உன் கவிதைப் பெண் யாரடா..??!!
------------------------------------
இருபது நிமிடம்
தாமதமாய் வந்த
என்னை
திட்டுகிறாய் நீ..,
இருபத்தியொரு வருடம்
தாமதமாய் வந்த
உன்னை
எதுவுமே சொல்லாமல்
அனுசரித்துக் கொள்கிறது
என் காதல்..!
------------------------------------
நீ கேட்டுக் கொண்டதால்
இந்த கவிதையைக் கூட
அழகாகவே எழுத
ஆசைப்படுகிறேன்..
ஆனாலும்
எழுதப்போவதில்லை..
காதலை விடவும்
அழகான ஒன்று
நமக்கெதற்கு..??!!
------------------------------------
பிரிந்து போன நாளில்
எல்லோரும் கொடுத்தார்கள்
நினைவு பரிசு..
நீ மட்டும் கொடுத்தாய்
உன் நினைவுகளை பரிசாக..
------------------------------------
விக்கலில் நான்
தண்ணீர் குடிப்பதில்லை..,
நினைப்பது நீயாக
இருந்தால் நீடிக்கட்டுமே..!!
------------------------------------
( படித்ததில் பிடித்தது...)
பின் குறிப்பு : உங்களுக்கு பிடிச்ச
காதல் கவிதைகளையும்
Comment Section-ல எழுதலாமே...!!
உன்னையும்
ReplyDeleteஎல்லோருக்கும்
பிடிக்கும்...
என்னையும்
எல்லோருக்கும்
பிடிக்கும்...
எங்களைத்தான்
எவருக்குமே
பிடிக்கவில்லை...