Wednesday, April 14, 2010

கணினியில் வைரஸ்

ஓரு வரி கருத்து:மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் நீண்ட நாள் அங்கேயே தங்க முடியாது.




கணினி உபயோகிப்பவர்களுக்கு வைரஸ் எனும் பெயர் கேட்டால் கொஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கும் அதிலும் புதியவர்களுக்கு கணினியில் ஏதாவது தகராறு என்றால் உடனே அவர்கள் சர்வீஸ் செய்யத்தான் நினைப்பார்கள் பார்மட் செய்யாமல் வைரஸ் நீக்கினாலும் அவர்களுக்கு அந்த பயம் விலகாது சரி இந்த வைரஸ் எப்படித்தான் நம் கணினியின் உள்ளே நுழைகிறது அந்த நுழைவாயிலை கொஞ்சம் அடைத்தால் இந்த பிரச்சினைக்கு கொஞ்சம் தீர்வு கிடைக்கும்.



வைரஸ் இணைய வழியிலும் மற்றும் பென் டிரைவிலும்,பிளாப்பி வழியிலும் தான் ஒரு கணினிக்குள்ளாக வைரஸ் வருகிறது அதிலும் இப்போதெல்லாம் பிளாப்பி என்பது இல்லாமல் போய்விட்டது அது ஏன் தகவல் பரிமாற்றத்துக்காக நாம் பயன்படுத்தும் சிடியின் வழியாக வைரஸ் வருவதில்லை ஏனென்றால் அது எழுதுவதற்கு அனுமதிப்பதில்லை ஆனால் பென் டிரைவ் அப்படியில்லை எத்தனை முறை வேண்டுமானாலும் அழித்து பதிந்து கொள்ளலாம் இந்த இடம் தான் வைரஸ்க்கு துணை செல்கிறது



இப்படி பென் டிரைவில் வரும் வைரஸ் தடுக்க சின்ன வழிமுறையை பின்பற்றலாம் இது சின்ன வழிமுறை ஆனாலும் இதனால் கணினிக்கு அதிக பாதுகாப்பு நிச்சியம், உங்கள் பென் டிரைவில் ஒரு புதிய போல்டர் உருவாக்கி அதற்கு பெயர் autorun.inf என கொடுத்து படத்தில் காண்பித்துள்ளது போல Read Only , Hidden இரண்டையும் தேர்வு செய்து ஓக்கே கொடுத்து விடவும் இனி இந்த போல்டர் உங்கள் பென் டிரைவில் இருந்து மறைந்து விடும்
















எதற்காக இந்த போல்டரை உருவாக்கினோம் பெரும்பான்மையான வைரஸ்கள் இந்த Autorun.inf வழியாகதான் வருகிறது அப்படி வரும் வைரஸ்கள் நமது பென் டிரைவில் ஏற்கனவே ஒரு autorun.inf இருப்பதாலும் அது Read Only , Hidden ஆக இருப்பதாலும் அதனால் இந்த பெயரில் autorun.inf உருவாக்கி உள்ளே வரமுடியாது.



ஒரு autorun.inf உருவாக்கி விட்டால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா? நீங்கள் உபயோகி்க்கும் பென் டிரைவ் என்றால் அதில் பாதுக்கப்பு ஏற்படுத்தியிருப்பீர்கள் வேறு ஒரு நண்பரின் பென் டிரைவ் தங்கள் கணினியில் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் அப்பொழுது என்ன செய்வீர்கள் இங்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்



கணினியில் பென் டிரைவ் இனைக்கும் முன்பு ஷிப்ட் கீயை அழுத்தி பிடித்துக்கொள்ளவும் இவ்வாறு செய்வதால் ஒரு வேளை அந்த பென் டிரைவில் வைரஸ் இருந்தால் அது autorun வழியாக தானியங்கியாக திறக்க விடாது இனி கீழே டாஸ்க்பாரில் வலது மூலையில் பென் டிரைவ் கணினியில் இணைந்ததற்கு அறிகுறியாக பச்சை நிற ஆரோ வந்திருக்கும் இனி Windows Key + E உபயோகித்து திறக்கும் விண்டோவில் பென் டிரைவ் தேர்ந்தெடுத்து இருமுறை கிளிக்கி திறக்காமல் வலது கிளிக் வழியாக open என்பதை தேர்ந்தெடுக்கவும் வேண்டுமானால் திறக்கும் முன்பே உங்கள் வைரஸ் காப்பான் கொண்டு சோதித்து விடுங்கள்.



ஒரு வேளை வைரஸ் இருந்தால்

1)Start- 2)Run Type 3) Type cmd



டிரைவின் பெயர் 4) G: (உங்கள் டிரைவின் எழுத்தை பார்த்துக்கொள்ளவும்)



அடுத்தபடியாக 5) ATTRIB -H -R -S AUTORUN.INF



மீண்டும் 6) EDIT AUTORUN.INF



இனி புதிதாக ஒரு ஊதா நிற விண்டோ திறக்கும் அதில் 7)File என்பதில் கிளிக்கி 8)Save as கொடுக்கவும் பின்னர் 9) Exit என கொடுக்கவும்(வெளியேறவும்)



மீண்டும் 10)Start- 11)Run Type 12) Type cmd



13) ATTRIB +H +R +S AUTORUN.INF



அடுத்து 14) EXIT

அவ்வளவுதான் இனி பென் டிரைவ் எடுத்து மீண்டும் கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள் இப்போது சோதித்து பாருங்கள் வைரஸ் இருக்காது.



உங்கள் வைரஸ் கொல்லி எந்தளவிற்க்கு சிறந்தது என சோதித்து பார்க்க கீழே இருக்கும் கோடிங்கை காப்பி செய்து நோட்பேட் திறந்து பேஸ்ட் செய்து சேமித்து பாருங்கள் உங்கள் ஆன்டிவைரஸ் மென்பொருள் சிறப்பாக செயல்பட்டால் இதை சேமிக்க விடாது அப்படி சேமிக்க அனுமதித்தால் ஆண்டிவைரஸ் மென்பொருளை மாற்றிவிட்டு வேறு நல்ல மென்பொருளை நிறுவுங்கள்.

Tuesday, April 13, 2010

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்



அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம்.




இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.



குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும்



Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.



hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.



சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.



recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.



temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.



laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.



laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.



தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.



அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.



இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.



ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

Friday, April 9, 2010

கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள்.


கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள்

அபாயங்கள் நம்மை வரவேற்கின்றனவா? அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா! என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை இரண்டும் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நம் வாழ்வோடு இரண்டறக் கலந்த கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள் குறித்து, அறிந்து அதற்கான தற்காப்பு வழிகளை நாம் மேற்கொண்டிருந்தாலும், சில அபாயங்களை நாம் அறியாமலேயே நாம் வரவேற்று மாட்டிக் கொள்கிறோம். கிராமப் புறங்களில் வேலியில் போகும் ஓணான் என்று ஒரு பழமொழி தொடங்கும். அந்த வகையில் தான் நாம் நம்மை அறியாமலேயே கம்ப்யூட்டரில் பல அபாயங்களை வரவழைத்துக் கொள்கிறோம். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

அடோப் பலவீனங்கள்:
மைக்ரோசாப்ட் புரோகிராம்களுக்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அடோப் நிறுவன அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது உறுதி. பிளாஷ் (Flash) அக்ரோபட் ரீடர் (Acrobat Reader) அல்லது ஷாக்வேவ் (Shock Wave) என ஏதாவது ஒன்றினை நாம் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கிறோம். கம்ப்யூட்டரைக் கெடுக்கும் மால்வேர் தொகுப்புகளால் இவை எளிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் பழைய பதிப்புகளை நீங்கள் பயன்படுத்திவந்தால், அவற்றில் உள்ள பலவீனமான இடங்களைப் பயன்படுத்தி மால்வேர் புரோகிராம்கள் நுழைவது எளிது என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அப்டேட் செய்யப்பட்ட பதிப்புகளில் தான் இந்த பலவீனமான இடங்கள் சரி செய்யப்பட்டு இருக்கும். பழைய பதிப்புகள் எனில் அவை மால்வேர் புரோகிராம்கள் எளிதாக நுழைய இடம் தருவதாக அமையும். இதில் இன்னொரு வகை பிரச்னை என்னவென்றால், இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், உங்கள் அடோப் பிளாஷ் பிளேயர் பழையதாக உள்ளது. அப்டேட் செய்திட இங்கே கிளிக் செய்திடுங்கள் என்று ஒரு செய்தி வரும். கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் முடங்கிப் போய்விடும். (என் சொந்த அனுபவம் இது). அல்லது பிரச்னை இருப்பதாகவும், அது குறித்த விளக்கத்தினையும், தீர்வையும் இந்த பைலில் பார்க்கலாம் என்று ஒரு பி.டி.எப். பைலுக்கான லிங்க் தரப்படும். கிளிக் செய்தால் அவ்வளவுதான். மீண்டும் ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்திடும் அளவிற்குக் கொண்டு செல்லும்.
இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? அடோப் தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டு கிடைப்பதாக இருந்தால், அடோப் நிறுவனத்தின் தளம் சென்று அந்த முயற்சியில் ஈடுபடுங்கள். வேறு தளங்கள் தரும், குறிப்பாக பாப் அப் விண்டோக்கள் தரும் லிங்க் மூலம் செல்ல வேண்டாம். அடோப் தளத்தைப் பார்த்து அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.
பயர்பாக்ஸ் ஆட் ஆன்:
பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்பு புரோகிராம்கள் அபாயத்திற்கான அழகான திறவுகோல்களாகும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஆக்டிவ் எக்ஸ் ப்ளக் இன் போல மோசமானது இல்லை என்றாலும், ஆபத்தை விளைவிப்பதில் இவையும் சளைத்தவை இல்லை. பல மால்வேர் புரோகிராம்கள், பயர்பாக்ஸ் பிரவுசரின் முதன்மை செயல்பாட்டில் சென்று வழி தேடாமல், ஆட் ஆன் தொகுப்புகளைத்தான் பார்த்து நுழைகின்றன.
பிளாஷ் பிளேயர், ஆன்லைன் மியூசிக் பிளேயர் என ஏதாவது ஒன்றுக்கான ஆட் ஆன் என்ற செய்தியுடன் இவை உங்களது கவனத்தை ஈர்க்கும். சரி எனக் கிளிக் செய்தால் மாட்டிக் கொள்வோம்.
இத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்புவது சிரமம் தான். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை தரும் வசதிகளும் பிரமாதமாய் இருக்கின்றன. முதலில் பயன்படுத்துகையில் இவை எந்த தீங்கும் விளைவிக்காமல் தான் இருக்கின்றன. பின் இவற்றைக் கண்காணித்து மால்வேர் புரோகிராம்கள், இவற்றைப் பயன்படுத்தி நுழைகின்றன.
இவற்றிலிருந்து தப்பிக்க பயர்பாக்ஸ் பிரவுசரை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடாமல், ஏதேனும் பிளாஷ் டிரைவ் மூலம் போர்ட்டபிள் பிரவுசரைப் பயன்படுத்தலாம்.
மேக் சிஸ்டம்:
பலர் இது போன்ற வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகள் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழையாது என்று எண்ணுகின்றனர். இது ஒரு காலத்தில் உண்மையாக இருந்தது. ஏனென்றால் இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், வைரஸ்களைப் பரப்புபவர்கள் மேக் பக்கம் கவனத்தைச் செலுத்தவில்லை. இப்போது நிலை மாறிவிட்டது. மேக் சிஸ்டம் வழியாகவும் மால்வேர்கள் பரவத் தொடங்கிவிட்டன. இந்த சிஸ்டத்திலும், பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை அவ்வப்போது அப்டேட் செய்திட்டால், மால்வேர்கள் நுழைவது தடுக்கப்படலாம்.
ஆப்பிள் சாதனங்கள்:
விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் நாம் ஆப்பிள் நிறுவன சாதனங்களைப் (சாப்ட்வேர்கள்) பயன்படுத்தி வருகிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். இவற்றையும் மற்ற அப்ளிகேஷன்கள் போலவே நாம் கண்காணிக்க வேண்டும். பல கம்ப்யூட்டர்களில் குயிக் டைம் மற்றும் ஐ ட்யூன்ஸ் ஆகிய ஆப்பிள் நிறுவன சாப்ட்வேர்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் குயிக் டைம் சாப்ட்வேர் தொகுப்பைப் பயன்படுத்தி பல வைரஸ்கள் பரவியது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இது அதிகம் இருந்தது. இதனை உணர்ந்த ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது இதற்கான தடுப்பு அப்டேட் பைல்களைத் தானாகவே அனுப்பி சரி செய்தது.எனவே அப்டேட் செய்வதுதான் இங்கும் பாதுகாப்பு வழியாகும்.
குழப்பும் யு.ஆர்.எல்.கள்:
மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சுருக்கி தரும் லிங்க்குகள் வழியாக மால்வேர்கள் நுழைவது தற்சமயம் அதிகரித்து வருகிறது. சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய முகவரியையும் தந்து, அது தீங்கு விளைவிக்கக் கூடியதா என அறிந்து கொள்ளலாம்.
டி.என்.எஸ். ஹைஜாக்:
எண்களில் அமைந்துள்ள முகவரிகளை, நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களில் அமைக்கும் பணியினை டி.என்.எஸ். சர்வர்கள் மேற்கொள்கின்றன. இந்த மாற்றத்தில் ஈடுபடுகையில் ஏதேனும் ஒரு மால்வேர் புரோகிராம், டி.என்.எஸ். சர்வர் தர இருப்பதனை ஹைஜாக் செய்து, தன்னுடைய மோசமான லிங்க்கைத் தரும் வேலை தற்போது நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்ப நாம் எந்த முயற்சியும் எடுக்க முடியாது. டி.என்.எஸ். சர்வர்களை இயக்குபவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.
மேலே சொன்னவை நாம் பயன்படுத்தியே ஆக வேண்டிய கம்ப்யூட்டர் சாதனங்கள் தரும் தீய விளைவுகளாகும். இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. எனவே கூடுதல் கண்காணிப்பும், மேலே பரிந்துரைக்கும் வழிகளுமே பாதுகாக்கும் கவசங்களாக இருக்கும்