Monday, October 13, 2014

லவ்வுன்னா என்ன??

5 வயசு பொண்ணு :
என் பொம்மைய அவன் புடுங்கிட்டு போனான்
எனக்கு கோவம் வந்திடுச்சு
அவன் சைக்கிள தள்ளி விடலாம்னு போறப்ப
என் பொம்மைக்கு புது சட்ட போட்டு
எடுத்துட்டு வருவது.
10 வயசு பொண்ணு :
அவன் சோசியல் சயன்ஸ் புத்தகத்துல
கலர் பென்சிலாலக் கிறுக்கிட்ட்டேன்
டீச்சர் கேட்டப்ப என்ன மாட்டி விடாம
அவனே முட்டி போட்டு நிறபது .
15 வயசு பொண்ணு :
ரெகார்ட் நோட் ஒன்னா ஒக்கார்ந்து எழுதும் போது
அந்த பேனாவ தான்னு வாங்கும் போது
அவன் கைல லேசா உரசுவது
20 வயசு பொண்ணு :
நான்கு வருடம் எதையுமே சொல்லாமல்
கல்லூரி கடைசி நாளில் விடை பெறும் போது
"அப்புறம் எப்ப பார்க்கலாம் ?"
என்று அவன் கேட்டது
25 வயசு பொண்ணு :
கையில ஒத்த ரோசாவோட வந்து
என்னைக் கல்யாணம் பண்ணிப்பாயா
என்று கேட்டு அவனையே முட்டாளாக்கி கொண்டது .
35 -45 வயசு பெண் மணி :
நான் ரொம்ப களைப்பா இருக்குறதப்
பார்த்து நான் காபி போட்டு தரவா
என்று அவர் கேட்பது
55 வயசு பெண்மணி :
அவருக்கு மைசூர்பான்னா உயிர்
எனக்கு சர்க்கரை நோய் நான் சாப்பிட
முடியாதென்று அவரும் சாப்பிடாமல்
அதை ஒதுக்குவது
65 வயது பெண்மணி
நான் கடைசி மூச்ச விடும் போது
என் கைய பிடிச்சிகிட்டே
என்னையும் கூட்டிட்டு போ என்று
அவர் கண்ணீர் விட்டது.

Sunday, January 5, 2014

அழுகுரல் ஒன்று கேட்டது, உற்று கவனித்தேன்.....



சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்
போது அழுகுரல் ஒன்று கேட்டது,
உற்று கவனித்தேன்..

தட்டிற்கு வெளியே இரண்டு சோற்று
பருக்கைகள் இறைந்து கிடந்தன,
அவைதாம் அழுதுகொண்டிருந்தன.
"எதுக்கு இப்படி அழறீங்க"
என்று கேட்டேன்?.

அதில் ஒன்று கண்ணீரோடு தன்
கதையைச் சொன்னது.
"ஒரு ஏழை விவசாயி...
கடனை உடனை வாங்கி விதை நெல்
போட்டு, வயலை உழுது,
நாற்று நட்டு,களை பறித்து,பயிர்
செய்து, நீர் பாய்ச்சி ரொம்ப
கஷ்டப்பட்டு எங்களை வளர
வைத்தார்..

நாங்களும் நல்லா வளர்ந்தோம்,
என்னோட சகோதர மணிகளில்
சிலரை எலிகள் நாசம் செய்தன..
பறவைகள் கொத்தித் தின்றன..
தப்பிப் பிழைத்த நாங்கள்
அறுவடைக்குத் தயாரானோம்.
அறுத்து,
களத்துக்கு கொண்டு வந்து,
தூற்றி அதிலும் வீணாகிப்போன
சகோதரமணிகள் தவிர்த்து பெரிய
பெரிய பைகளில்
எங்களை அடைத்து வைத்தார்கள்.
அப்புறம் நெல்
மணிகளிலிருந்து உமி நீக்கி எங்கள
போது காணாமல் போன
சகோதரமணிகள் நிறைய பேர்.
விற்பனைக்கு கடையில்
வைத்திருக்கும்
போது மூட்டைகளில் விழுந்த
ஓட்டைகளில்சிலரும், எடை போட்ட
போது கொஞ்சம் பேரும்
வீட்டுக்கு நீங்கள் வாங்கி வந்த
போது, அரிசி களைந்து சமைக்கும்
போது என்று எல்லாவற்றிலும்
தப்பிப்
பிழைத்து உங்களுக்கு உணவாகி உங்
தட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
இத்தனை பேர் உழைப்பில் விளைந்த
என்னை..

பல
இடர்ப்பாடுகளை கடந்து வந்த
என்னை.. இப்படி வீணாக்கினால்
அழாமல் என்ன செய்ய?" என்றது.
உணவை வீணாக்காதீர்கள்;
உழைப்பையும்!.