Thursday, August 30, 2012

படித்ததில் பிடித்தவை...

ஒரு நாள் ஒரு வயது முதிர்ந்த துறவியும், அவரது சிஷ்யனும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு போய் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் அடுத்த கரைய தாண்ட ஒரு உடைந்த பாலம் இருந்தது...














"சரி வா போகலாம்.." இது குரு. "அங்க பாருங்க குருவே! யாரோ நடுவுல இருக்குற மாரி இருக்கே?" இது சிஷ்யன். குருவும் சிஷ்யன் கூறிய பக்கத்தை உற்று நோக்கினர். அப்பொழுது ஒரு அழகான பெண் அந்த பாலத்தின் நடுவில் இருந்த உடைசல்களில் மாட்டிக்கொண்டு போக முடியாமல் தவிப்பது அவர் பார்வையில் பட்டது.







உடனே குரு அந்த இடத்துக்கு சென்று அந்த பெண்ணையும் தூக்கிக்கொண்டு தானும் பாலத்தை கடந்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த சிஷ்யனுக்கு ஒரே ஆச்சரியம், எங்கள் துறவற வாழ்க்கையில் பெண்களை சந்திப்பது, அவர்களை பார்ப்பது, அவர்களுடன் உரையாடுவது எல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்ட பாவ செயல்களாகும், இவரோ அந்த பெண்ணை தொட்டு தூக்கி இருக்கிறாரே என சிந்தித்தான். அந்த குருவோ பாலத்தை கடந்ததும் அந்த பெண்ணை கீழே இறக்கி வைத்தவுடன், அந்த பெண் அவருக்கு நன்றி கூறி விடை பெற்றார்.







அதன் பின் குருவும் சிஷ்யனும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். சிஷ்யனுக்கோ குரு செய்தது மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ள வில்லை. ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே சிஷ்யன் குருவிடம் கேட்டே விட்டான். "நீங்க செய்தது சரியில்ல, எனக்கு பிடிக்கவே இல்ல, ஒரு பெண்ணை தொட்டு தூக்கியது பிழை" என்றான். இதற்கு குருவோ எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் "நான் அந்த பெண்ணை பாலத்திற்கு கிட்டே கீழே இறக்கி விட்டுட்டேன், நீ இவ்ளோ தூரம் தூக்கிகிட்டு வந்தியா?? என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்..







நீதி : எமது வாழ்கையில் எதிர்பாராத/ ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன. ஆனால் நாமும் எமது வாழ்விலே அந்த குருவைப்போல அனைத்தையும் தாண்டி செல்கின்றோமா??? அல்லது அந்த சிஷ்யனைப்போல அவற்றை கடந்து போக விடாது பிடித்துக்கொண்டு எமது சந்தோஷத்தையும் கெடுத்துக்கொண்டு பிறர் நிம்மதியையும் கெடுக்கின்றோமா???

Wednesday, August 29, 2012

நான் நலமாக உள்ளேன்! என் மனசு மட்டும் தான் உள்ளே இறந்து கொண்டிருக்கிறது!

எதிர் பார்ப்புகள் அற்ற வாழ்க்கையில் ஏமாற்றங்கள் இருப்பதில்லை ஏமாற்றங்களே வாழ்க்கை ஆனா பின் அங்கு எதிர் பார்ப்புகளுக்கு இடம் இல்லை..


உண்மையாக நேசிப்பவர்கள் அவமான படுவார்களே ஒழிய எவரையும் அவமான படுத்த மாட்டார்கள் ♥ ♥ ♥


நான் சிரித்த நிமிடங்கள் பொய்யாக இருக்கலாம், ஆனால் அழுத நிமிடங்கள் நிஜமானவை...!



மற்றவரை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவர்கள் என்பதற்கு சரியான உதாரணம் ERASER #


நட்பு என்பது ரோட்ல கிடைக்கிற ரூபா நோட்டு மாதிரி தொலச்சவன் கவலை படுவான். கிடைச்சவன் என்ஜாய் பண்ணுவான்.so don't miss yours Friends
 
  Life was much easier when ''Apple'' and ''BLACKBERRY'' were just fruits.