Monday, September 3, 2012

காதலில் தோற்பது எப்படி? it copy not mine

காதலில் தோற்பது என்பது சாதாரண விசயமில்லை. கழட்டி விடுவது என்பதும் சாதாரண விசயமில்லை. அதுக்காக எம்புட்டு பாடுபடனும், எவ்வளவு தியாகம் பண்ணனும். இதைவிட முக்கியம் இதை உங்கள் ஆளும் உங்களைக் கழட்டிவிட உபயோகப்படுத்தலாம், கவனம்!






•முதல்ல போனில் இந்த ம்ம்ம் போடுவதை விடுங்கள். பத்து நிமிடம் எதுவும் பேசலேன்னா “ரொம்ப போர் அடிக்குதா?” கேள்வி வரும், உடனே ஆமான்னு பதில் சொல்லனும்.





•காலைல Good Morning, ராத்திரி Good Night எஸ்எம்எஸ் அனுப்புவதை நிறுத்துங்கள். நீங்க என்ன டிவி நியூஸ்லையா வேலை பார்க்குறீங்க??? (சில பக்கிகள் Automatic send later செட் பண்ணி அனுப்புறாங்கப்பா, அவ்வ்வ்வ்..)





•“எதுக்கு இவ்வளோ அழகா இருக்க! உன்னை பார்த்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு” இப்படி எல்லாம் கொஞ்சுவதை நிறுத்துங்கள். “உன் டிரஸ் அழகா இருக்கு, ஆனா அதை நீ போட்டு கெடுத்திட்டே” இப்படி சொல்லிப் பழகுங்கள். (சில நேரங்களில் அடி விழலாம்! என்ன செய்ய தோற்பது என்பது சாதாரண விசயமில்லை!)







•“ஒன்னே ஒன்னு கொடேன். ப்ளீஸ்!” இப்படியெல்லாம் தப்பித்தவறிக்கூட கேட்டுவிட வேண்டாம். பிறகு பிரிவது கடினம்.





•தோழிகளுடன் இருக்கும்போது, அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கவும். அவர்களுடனேயே பேசிக்கொண்டிருக்கவும். (யார் கண்டது வருங்காலத்தில் பிக் அப் ஆனாலும் ஆகலாம்!) ஆளுக்கு தன் அழகின்மீதே சந்தேகம் வரும். வரட்டும்! அப்புறம் எப்படி பிரிவது.









•சும்மா சும்மா பரிசு வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டாம்! கேட்டாலும் கூட நானே உனக்கொரு பரிசு; பிறகெதற்கு இன்னொன்னு என்று சமாளிக்கவும்!





•எந்த இடத்திற்கும் சொன்ன நேரத்திற்கு போய் அரிச்சந்திரன் என்று நிரூபிக்க வேண்டாம். ஒரு மணி மேரம் கழித்து போகவும் அல்லது போகாமல் தவித்து கடுப்பேற்றவும்.





•எப்பொழுது தண்ணியடித்தாலும் போனில் கூப்பிட்டு அரை மணிநேரம் அறுக்கவும்! (மீதி நேரமெல்லாம் அவிங்கதானே அறுக்கிராங்க!). “தண்ணியடிசிருக்கியா?” என்றால் ஆம் என பதில் சொல்லவும்.





•உடன் போகும்போதும் சரி, பேசும்போதும் சரி வழியில் வரும் பெண்களை வர்ணிக்கவும்! அப்புறம் அன்று முழுவதும் ஒரு இம்சையிலிருந்து உங்களுக்கு விடுதலை!





•அவங்க அம்மா அப்பாவுக்கு ஐஸ் வைப்பதை எல்லாம் விட்டுவிடவும். அவிங்க அப்பனை பார்த்த உடனே தம்மை கீழே போட்டுவிட்டு நல்லவன் மாதிரியெல்லாம் நடிக்க வேண்டாம். பார்க்கும் போதுதான் புகையை ஊத வேண்டும். கண்டிப்பாய் நம் ஆளிடம் சொல்வான்(ர்), “இதுக எல்லாம் எப்படி உருப்படப் போகுதோ!” (ர் – அதான் பிரிய போறோமே பிறகெதற்கு மரியாதை?)





•பிறந்த நாளுக்கு இரவு 12 வரை கண்விழித்திருந்து ஹாப்பி பர்த்டே சொல்லுவதையெல்லாம் விட்டுவிடவும். மதியம் கூப்பிட்டு “உனக்கு இன்னிக்கு பிறந்த நாளில்ல! மறந்தே போய்விட்டேன்! ஹாப்பி பர்த்டே!” பிறகு நீங்கள் பிரிவதற்கு முயற்சியே செய்ய வேண்டியதில்லை.





•இதை மட்டும் சொல்லுங்க “உன்னைப் போய் நான் ஹே ஹே ஹே” அம்புட்டுதேன்! முடிந்தது வேலை! (இது என்னோட Favourite)







தோற்பது எப்படின்னு தெரிந்தால்தான் வெற்றி பெற முடியும்!







Saturday, September 1, 2012

திருடன் என்ற தலைப்பில் கவிதை எழுத கண் மூடினேன்

திருடன் என்ற தலைப்பில் கவிதை எழுத கண் மூடினேன்

கண்ணை திறந்தால் பேனாவை காணோம் !!!!!!!!!!!!!!
[கொய்யால எவனோ ஆடய போட்டுடாண்ட ]


ஒரு மருத்துவ வகுப்பின் முதல் நாள் ஆசிரியர் ஒரு பிணத்தை வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்


"ஒரு மருத்துவனுக்கு மிக முக்கியமானது மூன்று விஷயங்கள் ஒன்று நோயாளியின் உடலை தொடவோ, பார்க்கவோ கூச்சப்படக்கூடாது அடுத்தது எதையும் நன்றாக கவனிக்க வேண்டும்"

என்று சொல்லிவிட்டு தன் விரலை பிணத்தின் வாய்க்குள் விட்டு பின் வெளியே எடுத்து விரலை முத்தமிட்டார்.பிறகு மாணவர்களிடம்,"சரி எல்லோரும் நான் செய்தது போல செய்யுங்கள்"

என்றார்.

மாணவர்கள் மிகவும் தயங்கினர் ஆனால் நேரம் ஆக ஆக எல்லோரும் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்தில் எல்லோரும் செய்து முடித்திருக்க ஆசிரியர்,



"எல்லோரும் முடித்தாயிற்றா? நான் பிணத்தின் வாய்க்குள் விட்டது ஆள் காட்டி விரல், முத்தமிட்டது நடு விரல்....இனியாவது நன்றாக கவனியுங்கள்"



இதிலிருந்து நீங்கள் கற்கும் நீதி " எப்போவும் அலர்ட் ஆறுமுகமா இரு"...:-)

Thursday, August 30, 2012

படித்ததில் பிடித்தவை...

ஒரு நாள் ஒரு வயது முதிர்ந்த துறவியும், அவரது சிஷ்யனும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு போய் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் அடுத்த கரைய தாண்ட ஒரு உடைந்த பாலம் இருந்தது...














"சரி வா போகலாம்.." இது குரு. "அங்க பாருங்க குருவே! யாரோ நடுவுல இருக்குற மாரி இருக்கே?" இது சிஷ்யன். குருவும் சிஷ்யன் கூறிய பக்கத்தை உற்று நோக்கினர். அப்பொழுது ஒரு அழகான பெண் அந்த பாலத்தின் நடுவில் இருந்த உடைசல்களில் மாட்டிக்கொண்டு போக முடியாமல் தவிப்பது அவர் பார்வையில் பட்டது.







உடனே குரு அந்த இடத்துக்கு சென்று அந்த பெண்ணையும் தூக்கிக்கொண்டு தானும் பாலத்தை கடந்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த சிஷ்யனுக்கு ஒரே ஆச்சரியம், எங்கள் துறவற வாழ்க்கையில் பெண்களை சந்திப்பது, அவர்களை பார்ப்பது, அவர்களுடன் உரையாடுவது எல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்ட பாவ செயல்களாகும், இவரோ அந்த பெண்ணை தொட்டு தூக்கி இருக்கிறாரே என சிந்தித்தான். அந்த குருவோ பாலத்தை கடந்ததும் அந்த பெண்ணை கீழே இறக்கி வைத்தவுடன், அந்த பெண் அவருக்கு நன்றி கூறி விடை பெற்றார்.







அதன் பின் குருவும் சிஷ்யனும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். சிஷ்யனுக்கோ குரு செய்தது மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ள வில்லை. ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே சிஷ்யன் குருவிடம் கேட்டே விட்டான். "நீங்க செய்தது சரியில்ல, எனக்கு பிடிக்கவே இல்ல, ஒரு பெண்ணை தொட்டு தூக்கியது பிழை" என்றான். இதற்கு குருவோ எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் "நான் அந்த பெண்ணை பாலத்திற்கு கிட்டே கீழே இறக்கி விட்டுட்டேன், நீ இவ்ளோ தூரம் தூக்கிகிட்டு வந்தியா?? என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்..







நீதி : எமது வாழ்கையில் எதிர்பாராத/ ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன. ஆனால் நாமும் எமது வாழ்விலே அந்த குருவைப்போல அனைத்தையும் தாண்டி செல்கின்றோமா??? அல்லது அந்த சிஷ்யனைப்போல அவற்றை கடந்து போக விடாது பிடித்துக்கொண்டு எமது சந்தோஷத்தையும் கெடுத்துக்கொண்டு பிறர் நிம்மதியையும் கெடுக்கின்றோமா???

Wednesday, August 29, 2012

நான் நலமாக உள்ளேன்! என் மனசு மட்டும் தான் உள்ளே இறந்து கொண்டிருக்கிறது!

எதிர் பார்ப்புகள் அற்ற வாழ்க்கையில் ஏமாற்றங்கள் இருப்பதில்லை ஏமாற்றங்களே வாழ்க்கை ஆனா பின் அங்கு எதிர் பார்ப்புகளுக்கு இடம் இல்லை..


உண்மையாக நேசிப்பவர்கள் அவமான படுவார்களே ஒழிய எவரையும் அவமான படுத்த மாட்டார்கள் ♥ ♥ ♥


நான் சிரித்த நிமிடங்கள் பொய்யாக இருக்கலாம், ஆனால் அழுத நிமிடங்கள் நிஜமானவை...!



மற்றவரை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவர்கள் என்பதற்கு சரியான உதாரணம் ERASER #


நட்பு என்பது ரோட்ல கிடைக்கிற ரூபா நோட்டு மாதிரி தொலச்சவன் கவலை படுவான். கிடைச்சவன் என்ஜாய் பண்ணுவான்.so don't miss yours Friends
 
  Life was much easier when ''Apple'' and ''BLACKBERRY'' were just fruits.    

Sunday, June 10, 2012

படித்ததில் பிடித்தது.

உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது-




நிறுத்த சொல்கிறாய் நிறுத்திக்கொள்கிறேன் உன்மீது கொண்ட காதலை அல்ல உனக்காக துடிக்கும் என் இதயத்தின் துடிப்பை............



பிரிந்து இருந்து பிரியம் கட்ட வேண்டாம் ".......!

"நீ அருகில் இருந்து சண்டை போடு , போதும் ",

அது தான் காதலின் ஆழம்



சரியான நேரங்களை தவறவிட்டால், தவறான நேரங்களில் சரியவேண்டி வரும்.



பேசவேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்துவிட்டால், அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்கமுடியாது!!!!!



கடந்த வருடங்களில், நடந்த வருடங்களை விட தவழ்ந்த வருடங்களே இனிமையானது!



ஷங்கர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க்-விஜய்# அப்போ நீங்கதானே அந்த டைனோசர்.



அழிவேன் என்று தெரிந்தும், உருகிட விரும்பினேன் உன் காதல் வெப்பத்தில்



வலியை வலியாய் அனுபவித்து வலியை கொள் (ல் )கிறேன் ...

வலியில் வழி தேடுகின்றேன்



உதடுகளின் பிரிவை கூட அவனால் தாங்க

முடியவில்லை அதனால் என்னவோ ..............

என்னை பார்க்கும் போதெல்லாம் மௌனம் ஆகி

விடுகிறான் .............



வேடிக்கை பார்க்கும் உனக்கோ

என் வேதனை புரிவதில்லை

வேதனைப்படும் எனக்கோ

வேடிக்கை பார்க்க தெரிய வில்லை !!