காதல் கவுஜைகள்
வரைந்த ஓவியமாக நீ
வரையப்பட்ட காகிதமாய் நான்
ஏன் வரைந்தோம் என உன் அப்பா...
காகிதத்தில் உன்பெயரை 
எழுதுகிறேன்...
முடியவில்லை
கையில் எழுதுகிறேன் 
முடியவில்லை 
சுவரில் எழுதுகிறேன்
முடியவில்லை 
ஒன்று மட்டும் புரிந்தது
பேனாவில் மை இல்லையென்று...
வானத்தில் நிலாவை 
ரசித்தவளிடம்
நிலாவை ஏன் வானத்தில் 
பார்க்கிறாய் 
கண்ணாடியைப்பார் என்றேன்...
வெட்கத்தில் ஒடுகிறாள்
பாவிபுள்ள எதைச்சொன்னாலும் நம்புது...
இனிமேல் குடிக்கமாட்டேன்
என சத்தியம் கேட்டாய் 
பதிலுக்கு இனிமேல் குளிப்பேன் 
என சத்தியம் தருவாயா? 
ஒரு கவிதை எழுது என்றாள் 
அவள் பெயரை எழுதினேன் 
வெட்கப்படுகிறாள்
அவளுக்குத் தெரியாது நான் ஒரு
மொக்கை கவிஞன் என்று...

