Friday, January 29, 2010

சவாலே சமாளி! இதை முடிக்க உங்களுக்கு ஆகும் நேரம் எவ்வளவு?








 

நீங்கள் பார்க்க (விளையாட) போகும் இந்த விளையாட்டு ஏற்கனவே பலர் விளையாடி இருப்பீர்கள், இது தெரியாதவர்களுக்காக. இதில் உள்ள சுவாராசியம் கொஞ்ச நாள் சென்றால் இந்த விளையாட்டு மறந்து விடும், எனவே நீங்கள் ஏற்கனவே விளையாடி இருந்தாலும் உங்களுக்கான சவால் தான்... என்ன கொஞ்சம் விரைவில் கண்டு பிடித்து விடுவீர்கள்! அவ்வளவே! :-)

இந்த விளையாட்டு என்னவென்றால் இந்த கரையில் உள்ளவர்கள் அனைவரும் மறு கரைக்கு செல்ல வேண்டும்!


சரி விளையாட்டிற்கான விதிமுறையை பார்ப்போம் 

இந்த படகில் இருவர் மட்டுமே செல்ல முடியும்

அம்மா, அப்பாவின் துணை இல்லாமல் மகன்களுடன் இருக்க முடியாது (Mother can't stay with son(s) without father presence)

அதே போல அப்பா, அம்மாவின் துணை இல்லாமல் மகள்களுடன் இருக்க முடியாது (Father can't stay with daughter(s) without mother presence)

திருடன் (வரி போட்ட சட்டை) காவலர் உடன் அல்லது தனியாக மட்டுமே இருக்க முடியும்

அம்மா அப்பா காவலர் மட்டும் இந்த படகை ஓட்ட முடியும், குழந்தைகள், திருடன் தனியாக போக ஓட்ட முடியாது

ஆளில்லாமல் தனியாக படகை ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு வர வைக்க முடியாது

படகில் யாரையாவது ஏற்ற இறக்க வேண்டும் என்றால் அவர்களை க்ளிக்க வேண்டும்

படகை மறுகரைக்கு ஓட்ட வேண்டும் என்றால் சிகப்பு நிற குமிழை க்ளிக்க வேண்டும்

முக்கியமான விஷயம் இந்த விளையாட்டில் எந்த ஒரு ஏமாற்று வேலையும் கிடையாது, முழுமையாக உங்கள் திறமையே!

பார்க்கலாம் நீங்கள் எத்தனை நிமிடத்தில் அனைவரையும் மறு கரைக்கு கொண்டு செல்கிறீர்கள் என்று! ;-) முதன் முதலில் நான் ஐந்து வருடம் முன்பு விளையாடினேன் (அப்போது விதிமுறைகள் எதுவும் தெரியாது, நானே விளையாடி தெரிந்து கொண்டேன்) அதன் பிறகு இப்போது தான் விளையாடினேன். முன்பு எவ்வளவு நிமிடத்தில் முடித்தேன் என்று நினைவில்லை, தற்போது 14 நிமிடத்தில் முடித்தேன்.

விளையாட இங்கே சொடுக்கவும்  (விளையாட்டை துவங்க நீல நிற வட்ட வடிவ பொத்தானை அழுத்தவும்)
நன்றி கிரி

No comments:

Post a Comment