Tuesday, September 1, 2009

என் தேவதையின் சோகம் .

எப்போதும் போல இல்லை இன்று. மனம் சோகத்தின் நிழலோடு காணப்படுகிறது. கவிதைகள் சோகத்தை கரைக்கும் என்ற நம்பிக்கையோடு கவிஞானாகிறேன்.


அந்த குட்டி தேவதை கடவுளின் முன் சோகமாய் வந்து சேர்ந்தது

கடவுள் அதனுடைய வாட்டத்தை கண்டு அதனிடம் கேட்டார்.

"என்ன ஆனது.. உன் புன்னகைக்கு

என்ன ஆனது.. உன் பூரிப்பிற்கு

என்ன ஆனது.. உன் கண்களுக்கு

என்னவோ இழந்தது போல்

என்னவோ தொலைத்தது போல்

என்னவோ கிடைக்காதது போல்

ஏன் இந்த வாட்டம்..

நான் அறியலாமா உன் மன ஓட்டம்?"

தேவதை சொன்னது

" இறைவா எனக்கு கொடுப்பது பிடிக்கவில்லை"

கடவுள் சொன்னார்

" என்ன காரணம் என்று நான் அறியலாமா?"

தேவதை சொன்னது

"இறைவா..!!

நான் அன்பை நீட்டுகிறேன்

அதை பெற்றுக் கொண்டு

கன்னத்தில் அரைகிறது உலகம்;

நான் பூக்களை கொடுக்கிறேன்

அதை பெற்று கொண்டு

தீயால் சுடுகிறது உலகம்;

நான் புன்னகையை கொடுக்கிறேன்

அதை பெற்று கொண்டு

கண்ணீரை பரிசளிக்கிறது உலகம்;








நான் அரவணைப்பை கொடுக்கிறேன்

அதை பெற்றுக் கொண்டு

என்னை அசிங்கமானவன் என்கிறது உலகம்;

நான் ஆதரவை கொடுக்கிறேன்

அதை பெற்றுக் கொண்டு

அறிவுகெட்டவனவன் என்கிறது உலகம்;

நான் பாசத்தை மட்டுமே கொடுக்கிறேன்

அதை பெற்றுக் கொண்டு

"அவனோரு மிருகம்" என்கிறது உலகம்."

கடவுள் புன்னகைத்தார்..

தேவதை கன்னம் பிடித்து அதன் கண்களை பார்த்தார்.

"அதோ அங்கே பார்.. ஒரு மனிதன் வலியால் தவிக்கிறான்."

தேவதை சொன்னது

"ஒரு நிமிடம் இறைவா.. இதோ வந்துவிடுகிறேன்"

கடவுள் தேவதையின் கைகளை பிடித்து சொன்னார்.

தேவதை பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தது.

கடவுள் சிரித்தார்.

அட என் அன்பு தேவதையே!! நீ கொடு வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் நீ எதையும் எதிர்ப்பார்க்காமல் கொடு. அப்படி கொடுக்க பழகிவிட்டால் உனக்கு சோகம் இருக்காது.இப்படி கண்ணீர் வடிக்க வேண்டாம்.

கொடுப்பது உன் இயல்பு. அதுதான் உன்னை இயக்கும் உயிர். அதை நீ மாற்ற முயற்சிக்காதே. அதற்கு பதிலாக உன்னை நீயே சரி செய்துகொள்.எதிர்பார்க்காமல் கொடு.அதுவே உனக்கு நான் தரும் உபதேசம்"

என்ன சரிதானே !! இப்போது கிளம்பு.."

தேவதை பிரகாசமான புன்னகையோடு சொன்னது :

"நன்றி இறைவா!! இது உங்களுக்காக "

தேவதை இறைவனின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அந்த மனிதனை நோக்கி பறந்தது.


3 comments:

  1. Its a great message,and a good effort; i hope u'd make ur page more colourful and useful..
    Thushyanthan

    ReplyDelete